பொன்மொழிகள்2

• ஒருநாள் கவலை. ஒருநாள் மகிழ்ச்சியை விட நீளமானது. - சீனா.
.
• உண்மை செருப்பணிந்து புறப்படுவதற்குள் பொய் உலகையே சுற்றிவிடுகிறது. - இங்கிலாந்து
.
• உனக்கு பகைவன் வேண்டுமா? அப்படியானால் ஒருவனுக்கு கடன் கொடுத்து திருப்பிக் கேள். - பிரான்ஸ்

• இனிமையாகப் பேசினால் கெட்ட சரக்கும் விற்றுப் போகும். - ஜெர்மனி.

• வல்லவன் மணலிலும் பம்பரம் விடுவான். - ஜப்பான். . • செத்துக் கிடக்கும் சிங்கத்தை விட உயிருள்ள சுண்டெலி மேலானது. - ரஷ்யா.

* எவ்வளவுதான் மறைத்து வைத்திருந்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழுக்கான ஆசை எப்போதும் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கும்.

* அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும்.
தவறுகள் அதற்குரிய செலவுகள்.

* அதிகப் பேச்சு,பொய் இவை இரண்டிற்கும் நெருக்கம் அதிகம்.

* குழந்தைகள் இல்லையென்றால் உலகம் துன்பம் நிறைந்ததாகி விடும்.

முதியோர் இல்லையென்றால் உலகம் மனித இயல்பற்றதாகி விடும்.

* மகிழ்ச்சி,மிதமான உணவு,போதிய ஓய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா.

எழுதியவர் : செல்வமணி (9-Nov-15, 7:53 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 79

மேலே