வாய்

வாய்!
------------
கல்யாண மண்டபத்தில் கூட்டம் திமிறிக்கொண்டு இருந்தது.

தெருவை அடைத்து ஒரு பெரிய கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினாள் மிஸஸ் மங்களா ராமநாதன்.

“ஏய்... அங்கே பாரேன். எவ்ளோ பெரிய தொழிலதிபரின் மனைவி! ஆனா, அந்த பந்தா எதுவும் இல்லாம, சிம்பிளா காட்டன் புடவையில வந்திருக்கா பாரு. அவ நினைச்சிருந்தா நகைக் கடையையே சுமந்துட்டு வந்திருக்கலாமே! ஆனா, பொட்டுத் தங்கம் இருக்குதா உடம்புல? அடடா... என்ன அடக்கம்! எத்தனை எளிமை!” - அங்கே இருந்தவர்களின் வாய்கள் வியப்பில் சளசளத்தன.

சிறிது நேரத்தில், அங்கே வந்தாள் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி. இவர்கள் அந்தஸ்தோடு நெருங்கி வர முடியாத ஏழை என்பது தோற்றத்திலேயே தெரிந்தது.

“இதென்னடி கண்றாவி! அபிஷேகத்துக்குத் தயாரா நிக்கிற தைல நாச்சியார் போல வந்திருக்காளே? கழுத்தும் காதும் மூளியா, அச்சுபிச்சுன்னு ஒரு புடவையை எடுத்துச் சுத்திக்கிட்டு... சே! கல்யாணத்துக்கு வர்ற மாதிரியா வந்திருக்கா? தரித்திரம்!”

அதே வாய்கள்தான்!

- கீதாநாதன்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (9-Nov-15, 3:44 pm)
Tanglish : vaay
பார்வை : 210

மேலே