விட்டுகொடுக்கும் மனப்பான்மை

விட்டுக்கொடுங்கள்...
வாழ்க்கை வசந்தமாகும்...

தினசரிகளில், ஊடகங்களில் தற்போது பெருவாரியாக காணப்படும் செய்தி திருமண முறிவு, முறைகேடான உறவுகள் மற்றும் பல. விட்டுகொடுக்கும் மனப்பான்மை இன்மை, அதிகாரம் செலுத்துதல் போன்றவைகள் முக்கிய காரணிகளாக நான் கருதுகின்றேன்.

இடை இடையே ஏற்படும் சிற்சில வாக்குவாதங்கள், மூன்றாம் மனிதரின் குறுக்கிடு , இவற்றால் பெரிய அளவில் உறவு முறிவுக்கு வழி வகுக்கின்றன. காதல் திருமணங்கள் , பெற்றோர் அங்கீகரித்த நிலையில் , திருமணத்திற்கு முன்பே கசந்து விடுகின்றன. நான் படித்து ரசித்த சிறுகதை உங்களுக்காக,

ஒரு காட்டில் இரண்டு மான்கள் வாழ்ந்து வந்தன. ஒரு முறை நீர் வறண்டு, காட்டில் பெரிய வறட்சி ஏற்பட அங்கு வாழ்ந்து வந்த விலங்கினங்கள் வேறு இடத்துக்கு செல்வதென முடிவெடுத்து , இடம் பெயர தொடங்கின. அவ்வாறு இடம் பெயரும் பொது, அவைகள் பல மைல்கள் நடக்க வேண்டி வந்தது.

நடந்துவந்தது களைப்பாக , சிறிது சிறிதாக தண்ணீர் தாகம் எடுக்க தொடங்கியது. ஏற்கனவே வறட்சியின் பிடியில் இருந்த மான்கள் , தற்போது நடந்த வந்த களைப்பும் ஒன்று சேர, சற்று நேரம் இளைப்பாறி நீரை தேட தொடங்கின. அப்போது இதற்கும் மேல் நடக்க முடியாது என்கிற நிலையில், . நம்பிக்கை இழக்காத மான்கள் ஒரு வழியாக ஒரு ஓடையை கண்டுபிடித்தன. ஆனால் அதில் ஒரு மான் மட்டும் தாகம் தணிக்கும் அளவிற்கு நீர் இருந்தது.

ஆண் மான், பெண் மானை பார்த்து நீ பருகு என சொல்ல , அதற்கு ஒப்புக்கொள்ளத பெண் மான், ஆண் மானை அருந்த சொல்லியது.
இரண்டு மான்களும் நீர் அருந்தாத நிலையில், ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தன. ஒரே நேரத்தில் இரண்டும் நீர் பருக வேண்டும் என்று. மான்கள் இரண்டும் நீரில் வாய் வைத்திருந்த நிலையில், நீர் குறையவே இல்லை.

ஆண் மான் அருந்தட்டும் என்று, பெண் மான் இருந்த நிலையில் , பெண் மான் அருந்தட்டும் என்று ஆண் மான் இருந்தது. ஒன்றுக்கு ஒன்று , அவ்வளவு அன்னியோன்யம் , விட்டுகொடுக்கும் மனப்பான்மை , வாழ்வின் சிக்கலான சூழ்நிலையிலும் ஒற்றுமையுடன் சேர்ந்தே செயல்படுவது வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்..

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (12-Nov-15, 9:42 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 625

மேலே