உரிமைகள் பறிக்கப்படும் - எளியோருக்கும் பெண்ணிற்கும்

குடியைக் கொடுத்து
குடிமக்கள்
குடியைக் கெடுக்கும்
கடையை
மூடச்சொல்லி கோரிடுவோம்
தடையை

இலங்கையில்
மாடுகள் ( புல்) வெளியில்
மானிடர்கள் முள்வேலியில்
தனி நாடு கேட்டோர்க்கு
சுடுகாடே மிச்சம்

புயல் பாதித்த
குபேரன் வீட்டு
கண்ணாடி ஓட்டிற்கும்
குடிசை வீட்டு
கந்தலான ஒலைக்கும்
நிவாரணம் ஒன்றே
இங்கே
வறுமை முறிக்கப்படுகிறது
உரிமை பறிக்கப்படுகிறது

முதலாளி வீட்டில்
இரண்டு வெள்ளைக் காரு
தொழிலாளி வீட்டில்
இரண்டு வேலைதான் சோறு

முதலாளி வீட்டில்
அடுப்பெரிக்க
ஏழை வயிறு எரிகின்றது

வாக்காளர் பட்டியலில்
பெயர் இல்லை
பெயர் சேர்த்து வாக்குசாவடி
சென்றால் ஒட்டு போடப்பட்டுவிட்டது
உரிமை தேடப்பட்டுவிட்டது

விவசாயி விதைக்கிறான் விதையை
அவனால் விதிக்கமுடிவதில்லை விலையை

பல அலுவலகங்கள்
இன்று
மக்களை அலைகழிப்பவைகள்

கால்தடமே பதியாத
கடல்தீவு
இலஞ்சமில்லா அலுவலகம்

அவர்
வாசிப்பது பாரதியின்
பெண்ணுரிமை கவிதை
மருமகள் மறுமணம் செய்ய
போடுகின்றார் தடை எனும் விதை

உயர் பூக்களாகிய
பெண்களின் உரிமைகள்
உதிரிப்பூக்களாய்ப் பறிக்கப்படுகின்றன

உரிமையைக் காப்போம்
உறவினை மீட்போம்

எழுதியவர் : குமார் (13-Nov-15, 10:34 pm)
பார்வை : 232

மேலே