மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
விதையுறை தேடி ஓட வேண்டும்
முளை விட...
மீண்டும் மீண்டும்
தரையை தேடி ஓட வேண்டும்
தளிர் விட...
மீண்டும் மீண்டும்
தண்ணீர் தேடி ஓட வேண்டும்
வேர் விட...
மீண்டும் மீண்டும்
சூரியன் தேடி ஓட வேண்டும்
இலைகள் வளர...
மீண்டும் மீண்டும்
வண்டுகள் தேடி மணம் வீச வேண்டும்
இனவிருத்தி செய்திட...
மீண்டும் மீண்டும்
சருகுகள் உதிர்த்திட அசைந்தாட வேண்டும்
வறுமை சமாளிக்க...
ஓரிடத்தில் நிற்க்கும் மரமே
மீண்டும் மீண்டும் இவ்வளவு ஓட
உலகை அல்ல
அண்டத்தையே சுற்ற போகும் மனிதா!
சின்ன தோல்விக்கே
சிறகொடிந்து விழுந்தால் எப்படி?
முதல் முயற்சியில் வென்றால் திறமைசாலி
மீண்டும் மீண்டும் முயன்று வென்றால் அனுபசாலி
மனதில் கொள்
அனுபவசாலி தான் திறமைசாலி ஆக முடியும்...