எழுத்தாளர் சரவணன் சந்திரனின் வாசகர் எழுத்து

பிரெஞ்சு நவீன இலக்கியங்களையும் ரஷ்ய இலக்கியங்களையும் வாசிக்கும் போது அதில் நவீன பாலியல் வாழ்க்கை நேர்மையாகவும் உண்மையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மாப்பசான், ஜோலா கதைகளில் பாலியல் வாழ்க்கை கத்தி மேல் நடப்பது போல இருக்கும். கொஞ்சம் தவறினாலும் ஆபாசமாகிவிடும். காதல், நேர்மை, உண்மை ஆகியவைதான் அதைக் காப்பாற்றிக் கொண்டு சேர்க்கும்.

தமிழிலும் பாலியல் வாழ்க்கை இதுபோல சொல்லப்படவில்லை என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் இருக்கும். பதிவிரதைத் தன்மையும் பாசாங்கும் ஆபாசமும் பாலியல் வாழ்க்கையை அப்பட்டமாகத் தராதுதானே!

அதேபோல நவீன தமிழ் வாழ்க்கையில் குற்றங்கள் ஒரு அங்கமாக மாறிப்போயிருப்பதுைம் ஒரு ஜெனேயைப் போல நேர்மையாகப் பதிவு செய்யப் படவில்லை என்ற ஏக்கமும் உண்டு.

சரவணன் சந்திரன் தனது இரண்டாவது நாவலில் அதை அற்புதமாக நிறைவேற்றித் தந்திருக்கிறான். ‘ஐந்து முதலைகளின் கதை’ நாவலின் மூலம் தமிழின் இளைய வாசகர்களிடம் தீராத பேச்சைக்கிளப்பி விட்டு அந்த ஹேங்-ஓவர் கொஞ்சமும் இல்லாமல் ஒரே மாதத்தில் இரண்டாவது நாவலை முடித்து விட்டு நீட்டினான்.

உண்மையில் இந்த நிமிசத்தில் தமிழ்நாட்டில் பணம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது தெரியவேண்டுமானால் நீங்கள் அவசியம் ‘ரோலக்ஸ் வாட்ச்’ வாசிக்க வேண்டும்.

நான் இன்ன ராசிக்காரன். எனக்கு இன்னன்ன அதிர்ஷ்டங்கள் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் பணம் நிர்த்தாட்சண்யம் இல்லாமல் அதை உங்கள் கண் முன்னாலேயே பொய்யாக்குவது இல்லையா?

சரவணன் தனது இரண்டாவது நாவலுக்கு ‘ரோலக்ஸ் வாட்ச்’ என்று பெயர் வைத்திருக்கிறான். எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆர் ரோலக்ஸ் வாட்ச் கட்டுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் விலை எத்தனையோ லட்சம் என்பார்கள். அதன் பெருமை பற்றி என்னவெல்லாமோ சொல்லுவார்கள்.

ஆனால் இத்தனை விலை உயர்ந்த பொருள் என்றால் அதில் டூப்ளிக்கேட்டும் இருக்கும் இல்லையா? அப்படியானால் டூப்ளிகேட் ரோலக்ஸ் வாட்சை எப்படி கண்டுபிடிப்பது?

அதை நான் சொல்ல மாட்டேன். இந்த நாவலை வாசிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

தைமூர் முதலை சரவணனைப்பார்த்து சிரித்திருக்கிறது போலும். அதனால்தான் இரண்டாவது நாவல் உண்மையிலே முதலாவதை கடந்திருக்கிறது.

அடுத்த ஆண்டு சரவணின் ஆண்டு என்னைப் பொருத்தவரை நான் அவனது மூன்றாவது நாவலில் கண்ணா யிருக்கிறேன்.

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (18-Nov-15, 8:22 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 99

மேலே