மழையும் தீபாவளியும்
எள்ளி நகைக்குது வானம்
அதில் தெரியுது மனிதனின் ஈனம்
'சோ' வெனப் பெய்தது மழை
பளிச் பளிச்சென சிரித்தது மின்னல்
டமால் டுமீலென முழங்கியது இடி
அதில் நமுத்தது சிறுவனின் வெடி
நான் காட்டுகிறேன் வானவேடிக்கை
அதற்கு ஈடாகுமோ உன் வாணவேடிக்கை
என்று சிரிக்குது வானம்
இணைந்தனவோ பஞ்ச பூதங்களும்
பூமியை அழித்திடும் மனித பூதங்களிடமிருந்து
காத்திடவே சுற்றுச் சூழலை
தடுத்திடவே பட்டாசு எனும் ஊழலை.