உச்சம் - இரு மனம் கொண்ட திருமணம் முறிந்தால் உடைந்த கண்ணாடி தான், ஒட்ட வைக்கவே முடியாது

உயர்ந்த தலைமுறை குடும்பங்களில் இதுக்கு மேல சகிப்புத்தன்மை குறைஜ்சு போக முடியுமா?

முறிந்தது இன்போசிஸ் ரோகன் மூர்த்தி- டிவிஎஸ் லட்சுமி வேணு திருமணம்; பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து!

பெங்களூரு: வர்த்தக உலகின் நட்சத்திர தம்பதியரான ரோகன் மூர்த்திக்கும், லட்சுமி வேணுவிற்கும் அக்டோபர் 31 அன்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களுடைய திருமணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப் துறையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம் இன்போஸிஸ். இதன் நிறுவனரான என்.ஆர்.நாராயணமூர்த்தியின் ஒரே மகன் ரோகன் மூர்த்தி. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மோட்டார் நிறுவனம் டி.வி.எஸ். குரூப். இதன் தலைவர் வேணுசீனுவாசனின் ஒரே மகள் லட்சுமி வேணு.

கடந்த ஜூன் 2011 ஆம் ஆண்டு சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மனக்கசப்பால் பிரிந்த இவர்கள் முறைப்படி இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விவாகரத்து வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் இருவருக்கும் பரஸ்பர ஒப்புதலுடனான விவாகரத்தினை அக்டோபர் 31ம் தேதியன்று அளித்துள்ளது சென்னை குடும்பநல நீதிமன்றம்.

இதுகுறித்து இருவருக்கும் நெருக்கமானவர்கள் தரப்பில், "இருவருமே மிகவும் இனிமையானவர்கள். எனினும், ஏதோ ஒரு வேறுபாடு உறுத்தலாக மாறி பிரிவுக்கு காரணமாகிவிட்டது. அவர்கள் இருவரும் சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி நன்றி: த (20-Nov-15, 7:28 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 394

மேலே