குருவிற்கு விண்ணப்பம்

காயப் படாமல் கல் எறியும் காலன் .
மாயப் பிணி போக்கும் மாயன்.
பாவத்தை புண்ணியமாக்கும்
பவித்திரன்
புன்னகையை பறித்துக் கொண்டு கண்ணீரை கடலாய்க்
கொடு. ----நான் அதிகம் கரைவது கண்ணீரில் தான்..
ஏன் இந்த தீரா தாகம்?
தயை கூர்ந்து தனித்து விடாதீர். தாக தவிப்பின் தணலில்
தகித்து தான் தன்னை அழிக்கிறேன்...
மெய்ப் பேயை(உடல்) ஒட்டி விடு
மெய்யனே ___என்னுள்
பொய்ப பேய் புகாது காத்திடு.
கரு பை சிறை வேண்டேன் _உன்
கை சிறை மட்டும்மே வேண்டினேன்.....
எதன் பொருட்டு இந்த முனைப்பு
முக்தி பெறவா?
முற்றிலும் இல்லை.
முன்னால் இருக்கும்
சிவ சத் குருவே _ உன்னை
கண்னால் காண மட்டுமே!!!!

எழுதியவர் : Athirstam (21-Nov-15, 4:46 pm)
சேர்த்தது : அழகி
பார்வை : 100

மேலே