மத்தாப்பு

உன் மத்தாப்பு சிரிக்கும் ஒவ்வொரு பொழுதும்
பட்டாசுத் தொழிற்சாலைகளில் புகைந்து
கொண்டுதானிருக்கிறது
குழந்தைத் தொழிலாளர்களின்
எதிர்காலம் .

ஒருசிலரின்
வண்ணமயமான வேடிக்கைகளுக்கு
பல சிறுவர்களின் இருண்ட வாழ்க்கை
துணை போகின்றன என்பது கண்கூடு.

நமது புன்னகைக்கு
அவர்களின் கண்ணீரே
அடித்தளமிடுகிறது

மத்தாப்புக்களின்
தலையில் தீ வைக்கும்போது
அது பல ஏழை சிறார்களின்
எதிர்காலத்தின் மேல் வைக்கப்படும்
கொள்ளி என்பதை உணர்ந்தால் போதும்
வெளியே புகையும் அதுஇனி
உன் உள்ளே புகையும்

மெய்யன் நடராஜ்

இது வல்லமை மின்னிதழ் நடத்திய படக்கவிதைப் போட்டியில் இவ்வாரம் சிறந்த கவிஞராக ல் கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-Nov-15, 1:40 am)
Tanglish : mathaappu
பார்வை : 226

மேலே