ஆதி சித்தனின் அரங்கேற்றம்
நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
சம்பவம்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வாசுகி ஆலகால விஷத்தை வெளிப்படுத்தியது. அதனை ஈசன் உண்டான். சத்தி தடுத்து நிறுத்தியதால் அது கழுத்தில் தங்கி விட்டது.
விளக்கம்
ஈசனானவர் எங்கும் நிறைந்தவர், பிறப்பிலி. மனித வாழ்வின் பிறப்பு மற்றும் இறப்பினை அவர்களின் மூச்சுக் காற்றே தீர்மானிக்கிறது.கழுத்தின் கண்டத்திற்கு மேல் வாசி பயில்பவர்கள் இறை தன்மையினை அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பில்லை. கழுத்துக்கு கீழே வாசி பயில்பவர்கள் உடல் ரீதியான மற்றும் மனரீதியான முன்னேற்றம் அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பு உண்டு.
இறை தன் நிலையிருந்து என்றும் வழுவாதிருக்க வாசியோகத்தின் முழுமையினை வெளிப்படுத்த ஈசனும் இறைவியும் நடத்திய நாடகம் அது.
மேலும் அறிய விரும்புவர்கள் குரு முகமாக அறிந்து கொள்க.