தேடாதீர்கள்
வ(வி)சனக் கவிதை
நான் .......
உங்கள் ஊருக்கு வந்தேன்
உங்கள் வீதிக்கு வந்தேன்
உங்கள் வீட்டுக்கும் வந்தேன்
அபரிமிதமான அன்பினால்
பெருக்கெடுத்து வந்தேன்
ஆனால் நீங்கள்.....
என்னை வெறுக்கிறீர்கள்
உதாசீனப் படுத்துகிறீர்கள்
வேண்டாம் என்கிறீர்கள்
கழிவு நீருடன் கலந்து
கடல் நோக்கித் தள்ளுகிறீர்கள்
நீங்கள் என் வீடெல்லாம்
குடி வந்தீர்களே நான்
வந்தால் ஏன் விரட்டுகிறீகள்
மிகவும் வருந்துகிறேன்
இனி வரமாட்டேன்
தூரச் செல்கிறேன்
உங்களை விட்டு
தேடாதீர்கள்.......
---- மழை

