யாருக்கு வேண்டும் சகிப்புத்தன்மை - மகிழினி

காதிலும் மூக்கிலும் புகைந்து கொண்டிருக்கிறது உயிர், குளிர் காற்றின் வழியாக ... தரைமட்டத்திலிருந்து பதினாரயிரமாவது அடி இது ... இமயம் எங்கும் புகையும் சத்தமும் பதை பதிக்கும் குளிரும் எதிரில் யார் வருகிறார்கள் இல்லை யார் இருக்கிறார்கள் என்பதைக்கூட அறிய வழியில்லாமல் செய்துவிட்டது .. மலையின் உச்சியில் இரண்டு அடி ஆழத்திற்கும் ஆறடி நீளத்திற்கும் வரிசையாக ஐந்து குழிகள் தோண்டப்படுகிறது...
"அல்லாஹ் அக்பர்" என்ற வரிகள் குரானிலிருந்து ஒலிக்க பின்வாரியாக ஐந்து குரலும் அதையே திருப்பி ஒலிக்கிறது .. இந்தியாவின் ராஜ மரியாதையுடன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க அங்கே தகனம் செய்யப்பட்டார்கள்..
1999 ல் நடந்த கார்கில் போரின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு இது .. பாகிஸ்தான் அரசாங்கம் தங்களின் ராணுவ வீரர்களின் உடலை வாங்க மறுத்துவிட்டதால், பி ஜே பி யின் மூத்த தலைவரும் அந்நாள் பிரதமருமான திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆணைக்கு இணங்க அவ்வுடல்கள் இங்கே புதைக்கப்பட்டன (இந்தியாவின் ராஜ மரியாதையுடன் )
****************************************************************************
இன்றளவும் உட்புற தமிழ் மாவட்டங்களில் கோவில்களும் மசூதிகளும் பக்கம் பக்கமாக வைத்துக்கொண்டு இந்துவா முஸ்லீமா என்று சண்டை போடாமல் அமைதி பிரார்த்தனைகள் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கின்றன .. செல்லம்மாவையும் நாச்சியாரையும் நாம் மறந்த சூழலிலும் தமிழக இஸ்லாமிய வீடுகளில் இன்னும் தமிழர்களாகவே வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் ....
****************************************************************************
இந்து என்றால் என்ன, முஸ்லீம் என்றால் என்ன? இந்த கேள்விகளை தவிர்த்து மக்களாக வாழ்ந்த கலாச்சாரத்தை தான் நம் வரலாறு காட்டுகிறது ..
****************************************************************************
யார் தான் இங்கே பெரும்பான்மை மக்கள் ?? தமிழர்களா ? சீக்கியர்களா ? கிழக்கு மாகாண மக்களா ? தெலுங்கு மொழி பேசும் மக்களா ? இல்லை மராட்டியர்களா ? ! இஸ்லாமியர்களா இல்லை கிருத்தவர்களா ? யாரும் இல்லை .. தன் குடும்பத்திலே தீண்டத்தகாதவன் என்ற பெயர் வைத்து வீட்டிற்குள் நுழைய யோசிக்கும் மகத்தான மக்களைவைத்துக்கொண்டு ஊராருக்கு உபதேசம் என்ன தேவை இருக்கிறது ...
****************************************************************************
இன்றளவும் சமத்துவத்தை வாயில் பேசிவிட்டு இன்ன ஜாதிக்காரன் என்று பெயருக்குப்பின்னால் போடுவதை பெருமையாகத்தான் நினைக்கிறார்கள் ..முதலில் ஹரிஜனத்தையும் பொதுஜனமென நினையுங்கள் .. மாட்டிறைச்சி சாப்பிடலாமா வேண்டாமா, பாகிஸ்தான் கிரிகெட் நடுவரை போட்டியிலிருந்து விரட்டலாமா வேண்டாமா இல்லை பாகிஸ்தான் அமைச்சரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகும் மக்களிடம் ஹோலி கொண்டாடலாமா வேண்டாமா இல்லை அமிர்கானையும் ஷாருக்கானையும் ஊரை விட்டு தொரத்திவிடலாமா என்பதை பின்பு பார்த்துக்கொள்ளலாம்..
****************************************************************************
தன் கூட்டில் இருக்கும் மற்ற பறவைகளை தன்னைப்போல பார்க்கும் மனப்பான்மை சாதாரண மக்களிடம் இருக்கிறது .. வேற யாருக்கோ தான் இல்லை ... யாருன்னு சொன்ன நம்மளை அடிப்பானுவ !!!!

எழுதியவர் : நித்யா (25-Nov-15, 11:27 am)
பார்வை : 613

சிறந்த கட்டுரைகள்

மேலே