‎கார்த்திகை_தீபத்திருநாள்‬ தெரிந்ததும், தெரியாததும்

நமது முன்னோர்களால் கொண்டாடப்பட்ட எல்லா பண்டிகைகளுக்கும் ஓர் அறிவியல் அடிப்படை இருக்கத்தான் வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கும் அறிவியல் காரணம் இருக்கத்தான் செய்கிறது..!

இன்று நம்நாட்டில் பரவிவரும் ‪#‎டெங்கு‬ போன்ற நோய்களில் இருந்து நம்மைகாப்பதற்கு, நம்முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து தான் ‪#‎கார்த்திகை_தீபம்‬..!

தமிழகத்தில் மழை காலம் முடிந்தவுடன் கொசு போன்ற பிற நுண்ணுயிர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். அவை பெரிய அளவில் பரவி மக்களுக்கு நோய்களை ஏற்படுத்துவது இந்த கார்த்திகை மாதத்தில்தான். எனவே அவைகளிடம் இருந்து நம்மை காத்து கொள்வதற்கு இந்த ‪#‎தீபதிருநாள்‬ வழி செய்கிறது..!

கார்த்திகை தீபத்தில் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து ஒருவித நெடி வரும். இந்த நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது. இதனால்தான் முன்னோர்கள் கார்த்திகை மாதத்தில் தீபங்களை ஏற்றி வைத்தனர்.

தற்போதைய சூழ்நிலையில் பிற வேலைகளை காரணம் காட்டி, சாக்குபோக்கு சொல்லி இந்த விழாவை தவிர்க்காமல், பழைய வழக்கம் இப்போ எதற்கு..? சாஸ்திரத்துக்கு 2 தீபம் ஏற்றுவோம் என்று நினைக்காமல் வீடு நிறைய விளக்கு ஏற்றி நம் குடும்பத்தை காத்துக் கொள்வோம்..!

பாரம்பரியமான களிமண்ணால் செய்யப்பட்ட அகள் விளக்கினால் ஒளியேற்றுவோம்..!!

அனைவருக்கும் எளியவனின் ‪#‎கார்த்திகை_தீப_நல்வாழ்த்துக்கள்‬ நண்பர்களே..!!

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (25-Nov-15, 7:23 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 102

மேலே