இணை இல்லை

இனிய காலைப் பொழுது
கோகில கானம்
தென்னிந்தியச் சிற்றுண்டி
இலை சாப்பாடு
நன் மக்கள் சேர்க்கை
நட்பின் உரையாடல்
கற்பனை உலகம்
மொழியின் மாண்பு
காப்பியங்களின் உட்கருத்து
களிப்பூட்டும் கவிதை
வண்ண மலரின் சிரிப்பு
மலைகளின் மதமதப்பு
கடலின் ஓசை
அருவியின் ஓட்டம்
பெளர்ணமி இரவு
தென்றலின் மென்மை
ஆலமரத்தின் நிழல்
ஓவியக் கோடுகள்
சிற்பத்தின் வளைவுகள்
வற்றாத ஜிவநதி
நடனக் கலையின் ஜதி
இசையின் இலக்கணம்
விளையாட்டில் வெற்றி
பீலியின் நீலம்
தாகம் தணிக்கும் தண்ணீர்
மங்கையின் ஒயில்
காதலின் முதல் ஈர்ப்பு
மனைமாட்சியின் ஆதரவு
நாதஸ்வரத்தின் மங்கலம்
கலவியின் சாந்தி
இனிப்பின் சுவை
மழலையின் பேச்சு
விவாதத்தின் கடையல்
அணிகளின் ஒருமுகம்
கற்பிக்கும் ஆசிரியர்
கடிகாரத்தின் உழைப்பு
எழுத்தின் ஆற்றல்
வயலின் சாகுபடி
வீணையின் கமகம்
ரயிலில் சாளர நோக்கு
செல்வத்தின் செயல்பாடு
மதுவின் மயக்கம்
இரக்கத்தின் மேன்மை
ஒழுக்கத்தின் பெருமை
வள்ளலின் கொடை
நெருப்பின் ஒருமைப்பாடு
ஆரோக்கிய உடம்பு
விஞ்ஞானத்தின் வளர்ச்சி
செந்தமிழின் செழுமை
அந்தராத்மாவின் வினாக்கள்
முதிர்ச்சியின் அமைதி
இன்னும் எத்தனையோ

எழுதியவர் : ரமணி (26-Nov-15, 8:20 am)
Tanglish : inai illai
பார்வை : 88

மேலே