காதல் கவிதை

கண்கள் மயங்குதடி-காதல்
சொல்ல துடிக்குதடி
காலங்கள் ஓடுதடி-காதல்
காவியங்கள் ஆகுதடி

துருவங்கள் மாறுதடி-மனம்
உன்னையே தேடுதடி
கவிதைகள் பேசுதடி-உன்
நினைவுகளை கூருதடி
தூக்கங்கள் தொலைந்ததடி-காதல்
ஏக்கங்கள் வந்ததடி

எழுதியவர் : என் கிறுக்கல்கள் (29-Nov-15, 9:17 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 104

மேலே