இனமும் மொழியும் நமக்கு உயிரே
சீறிடும் சிறுத்தையும் கூறுது சீற்றத்தை
கூடிடும் வேகமும் காட்டுது வீரத்தை !
பாய்ந்து செல்வதும் பயணத்தின் பகுதி
பயந்து ஓடுவதும் தனைகாத்திட கருதி !
பகைவரை கொல்வது இனத்தின் தகுதி
பாடமாய் கற்பிக்குது வாழ்வில் உறுதி
வேங்கையின் காட்சியுது புகைப் படமே
வேட்டையில் வீழ்வது பகைக் கூட்டமே !
இனமும் மொழியும் நமக்கு முதன்மையே
காப்பதும் வளர்ப்புதும் நமது கடமையே !
ஒற்றுமை நிலைப்பது என்றும் நன்மையே
தலைமுறை தழைப்பது எனது நோக்கமே !
பழனி குமார்
30.11.2015