தவிக்கும் தமிழகம்
தண்ணீர் சூழ்ந்த தமிழ்நாட்டில்
குடிநீர் இல்லா கொடுமைதனை
கூவிகூறும் அவல நிலை
குமுறும் நெஞ்சுடன் காணும் இந்நிலை
கூடிய விரைவில் தீராதோ
குதூகலமும் வாராதோ.
தமிழகம் தண்ணீரில் மூழ்க
தமிழ்மக்கள் கண்ணீரில் வாட
தாயற்ற சேய்போல் நெஞ்சங்கள் ஓலமிட
தரணி எல்லாம் அதைக்கண்டு பரிதவிக்க
இயற்கை செய்த கோரம் இதை
இருகண்ணால் காணும் இத்துயரம்
இனி வேண்டாம் வேண்டாம்மென
இன்னலுற்ற மனம் யாவும் இன்புற
ஈசன்அருள் செய்ய மனமுருக வேண்டிடுவோம்