ராசாவே உன்ன நம்பி - திகில் தொடர்- Episode 02
ராசாவே உன்ன நம்பி - திகில் தொடர்-
Episode 01
சிறு மணித்தியாலங்களில் புது வீடிற்கு வந்தனர். எல்லோரும் வீட்டினுள் நுழைந்தனர். சிறிது நேரத்தில் ராஜின் நண்பர்களும் உறவினர்களும் திவ்யாவின் நண்பிகளும் உறவினர்களும் எல்லோரும் வந்தனர்.
எல்லோரும் புது வீட்டில் பால்பொங்கி சம்பிரதாயங்களில் ஈடுபட்டனர். பிறகு விருந்து சாப்பிட்டுவிட்டு மாலைநேரம் ஆனதும் சந்தோசமாக எல்லாரும் விடை பெற்றனர்.
இரவானது எல்லோரும் அவரவர் அறைக்கு சென்றனர். ராஜ் மட்டும் சோபாவில் இருந்து கொண்டு லப்டோபில் என்னவோ செய்து கொண்டிருந்தான்.
திவ்யா : " ராஜ் நேரம் ஆகிட்டு தூங்கலையா? "
ராஜ் : " செல்லம் சின்ன வேல இருக்குமா ஈமெயில் ஒன்னு அனுப்பனும் நீ போய் தூங்கு நான் வாறன் "
திவ்யா : " சரி சீக்கிரம் வாங்க "
ராஜ் : " ம்ம்ம்ம் சரி "
திவ்யா அறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்துகொண்டிருந்தாள் அப்படியே சில நொடியில் உறங்கி விட்டாள். சிறுது நேரம் கழித்து ராஜ் அறைக்குள் வந்தான் திவ்யாவை சரியாக கட்டிலில் உறங்க வைத்து தலையனையை அவளின் தலையின் கீழ் வைத்துவிட்டு அவனும் உறங்கினான்.
இருவரும் உறங்குவதை பார்த்து கொண்டிருந்தது ஒரு கறுப்பு உருவம் அறையின் ஜன்னலின் பின்னாடி இருந்து.....
மறுநாள் விடிந்தது...
திவ்யா : " ராஜ் எழும்புங்க நேரம் ஆகிடு ஆபீஸ் போகணும் "
ராஜ் : " இப்பதான் தூங்கினான் அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா என்ன கொடும திவ்யா இது "
திவ்யா : " ஏன் சொல்ல மாட்டிங்க.. எழும்புங்க ராஜ் இல்லனா தண்ணி அள்ளி ஊத்திடுவன் "
ராஜ் : " எழும்பி தொலைரன் நீ செஞ்சாலும் செய்வ கொடுமைகாரி "
குளித்துவிட்டு காலை சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போக தயாரானான்.
ராஜ் : " அம்மா அப்பா போய்ட்டு வாறன் " " திவ்யா போயிட்டு வாறன் "
ராஜ் அம்மா அப்பா : " சரிப்பா கவனமா போயிடு வா "
திவ்யா : " கவனமா போய்டுவாங்க ராஜ் "
காரில் ஏறி புறபட்டான் ஆபீஸ் நோக்கி...
ராஜ் அப்பா : " அம்மா திவ்யா ஒரு காபி கொஞ்சம் தாம்மா "
திவ்யா : " ஒரு நிமிஷம் மாமா "
சிறிது நேரத்தில் காபியை கொடுத்து விட்டு அறையை சுத்தம் செய்ய சென்றாள்.
திவ்யா உள்ளே செல்கிறாள் கட்டிலில் உள்ள ராஜின் தலையணையில் சாய்ந்து கொண்டிருந்தது அந்த கறுப்பு உருவம்..
உடனே திவ்யா பயத்தில் சத்தமாக கத்திவிட்டாள் அந்த சத்தத்தில் அந்த உருவம் ஜன்னல் வழியாக போய் விட்டது. உடனே ராஜின் அம்மா அப்பா ஓடி வந்தனர்.
ராஜ் அப்பா : " திவ்யா என்னமா என்னாச்சி!!!!!? "
திவ்யா : " மாமா கட்டில்ல யாரோ படுத்து இருந்தாங்க மாமா அதுதான் பயந்து கத்திட்டன் "
ராஜ் அப்பா : " அது ஒண்ணுமில்லாம புது வீடுதானா அதுதான் உனக்கு அப்படி தோணி இருக்கும் பயப்படாதமா சரியா " என்று சொல்லி சமாதானம் படுத்தினார்.
திவ்யா : மனதுக்குள் " ஒரு வேல என்னடா கனவா இருக்குமா? இல்ல கற்பனையா? உண்மையா? "
என்று குழம்பி இருந்தாள் சிறிது நேரத்தில் " ஒண்ணுமில்லை சும்மா என்னடா மன கற்பனை " என்று நினைத்துகொண்டு அறையை சுத்தம் செய்து விட்டு சமைக்க சென்றாள்.
அந்த கறுப்பு உருவம் ஜன்னல் பின்னாடி இருந்து மீண்டும் வந்தது உள்ளே.....
தொடரும்.........