அப்பா

அம்மா வயிற்றில் பத்து மாதம்
என்றால் அப்பா தோளில் வாழ்நாள் முழுவதும்!

அப்பாவின் சட்டையை போட்டு குழந்தை
மருத்துவர் ஆகும்போது எல்லாம் வராத
நோய்க்கும் மருந்து வாங்குகிறார் அப்பா!

எத்தனை போர்வை போர்த்தினாலும்
வராத தூக்கம் அப்பாவின் சட்டையின்
கதகதப்பில் நன்றாக வருகிறது!

அன்னப்பறவை போல அப்பாவின்
மிதிவண்டி ஓசையை தனியாக
உணர்ந்து விடும் குழந்தை!

விழும்போது அம்மா என்று விழுந்தாலும்
எழும்போது அப்பா என்றே எழுகிறது
எல்லா குழந்தையும்!

பெண்மையின் வலியை கண்களை
வைத்தே உணரும் உன்னத உறவு அப்பா !

அப்பாகளுக்கு பெண் குழந்தைகள்
இறக்கைகள் இல்லாத தேவதைகள்!

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள்
குதிரை இல்லாத ராஜாக்கள்!

எத்தனை ஆண்கள் வந்தாலும்
பெண்களின் முதல் கதாநாயகன் அப்பாக்கள் தான்!

எழுதியவர் : aysha (8-Dec-15, 10:56 am)
Tanglish : appa
பார்வை : 217

மேலே