மணப்பாடு

தன் மணல் கொண்டு
தனிச் சிறப்பு பெற்ற
நாடு மணப்பாடு

நீண்டு கிடக்கும் கடல்
நீல அளவுகள் பாடும் காற்று

ஏறுவெயிலில்
எழுந்து காக்கும் சிலுவை

அவிழ்த்து விடும் படகை
இழுத்துக்கட்டும் கலங்கரைவிளக்கம்

குற்ற உணர்ச்சியின்றி
குளித்து மகிழும் குழந்தைகள்

எழுவாய் பயனிலை பொருட்டு
கருவாய் மலரும் மணல் மாத்திரை

கோவாவா? இல்லையென
மெருசலாகும் சின்ன ஜெருசேலம்

தீரா நோயை போக்க
சிதறிகிடக்கும் தாது மணல்

அறுபடை ஒன்றின் சிறப்பை போற்றும்
நாழிக்கிணறும்,குன்றும்

ஆஹா! என்ன ஒரு சிறப்பு
அகிலமே போற்றும் மணப்பாடு ....!

( போட்டிக்காக எழுதியது மழை காரணமாக குறித்த தேதியில் பதிவிட முடியவில்லை )

எழுதியவர் : ஹிஷாலீ (10-Dec-15, 9:52 am)
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே