பாபா ராம்தேவ்
ஆசிர்வாதம் செய்ய
ரூபாய் ஐம்பதாயிரம்
பிரசாதம் கொடுக்க
ரூபாய் ஒரு லட்சம்!
ஒரு நாள் வீட்டில்
தங்கினால் அவருக்கு
தர வேண்டிய தொகை
இல்லை! இல்லை!
காணிக்கை இருபது லட்சம்!
வீட்டில் வந்து பூஜை
செய்ய ஒரு கோடி !
ஊழலை ஒழிக்க
உண்ணாவிரதம் இருக்கும்
சாமியாருக்குத்தான்
இத்தனையும் !
வயிற்றுப் பிழைப்புக்காக
பாலியல் தொழில்
செய்யும் பெண்ணுக்கு
ரூபாய் ஐயாயிரம் !
வீட்டுக்குள்
வந்து செல்ல
முற்றும் துறந்த
சாமியாருக்கு
ரூபாய் ஐந்து லட்சம்!
அது சரி அவளைவிட
இவர் எப்படி உசத்தி ?
வா. நேரு