பொம்மைகள்
”பொம்மைகள்”
பொம்மைகள்
தேவையா?
கோபுரத்திற்கு...
பொம்மைகள் இல்லா
கோபுரங்கள் ஏது?
கரை எதற்கு
கால் நனைக்க
கரைகளில்லா
கடல் உண்டோ?
நிழலுக்கு ஆகுமோ?
விதைகள்....
விதைகள் இல்லா
விருட்சங்கள் உண்டோ?
முதல் படி எதற்கு?
ஏணிக்கு.....
முதல் படியில்லா
ஏணிகள் உண்டோ?
முயற்சி தேவையா?
முன்னேற்றத்திற்கு..
முயற்சி இல்லா
முன்னேற்றம் உண்டோ?
- கே. அசோகன்.