தமிழ் மழை

அருவியாய் கொட்டிடும் மழையிலே.
ஆர்ப்பரிக்கும் வெள்ளாற்றில்...
இதயத்துடிப்பின் வேகத்தில்..
ஈகை எதிர்ப்பார்க்கும் எம் ஜனம்...
உள்ளங்கள் எல்லாம் பயந்திருக்க..
ஊரெங்கும் சோகம் தானிருக்க...
எண்ணமெல்லாம் உயிர் மேலே படிந்திருக்க..
ஏழையென்ன, பணக்காரன் யென்ன மனிதன் தானென உணர்த்திட..
ஐம்புலனையும் காத்திட எத்தனை போராட்டம்..
ஒரு வழிப்பாதையானது எல்லாமே நீர் வழியானது..
ஓடையெங்கும் கரையொடைந்து பாய கண்ணீரில் தவிக்குது என் இனம்..
ஔ என்ற சத்தம் தான் உயிருடன் இருக்கிறேன் என உணர்த்துகிறது..
ஃ எம்மதமும் சம்மதம்..
அதுவே மனிதம் உணர்ந்து கொள்ளடா தமிழா..
உயிரெழுத்தில் உணர்த்துகிறது தமிழனுக்கு இயற்கையின் நேசத்தை...

எழுதியவர் : (12-Dec-15, 10:18 am)
Tanglish : thamizh mazhai
பார்வை : 56

மேலே