பாரதியின் நினைவில்

எதிலும் புதுமை செய்வாய் நீ
கவிதையிலும் புதுமை செய்தாய்
வசன கவிதை செய்தாய்
வாழும் தமிழர்களும் வரும் தமிழர்களும்
கவிஞர்கள் ஆகிட வேண்டும் என்ற
வள்ளன்மை குணம் உனக்கு !
----கவின் சாரலன்

உனது கவி வசனத் துளிகள் ....

சக்தி :

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்
சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்
சக்தி அனந்தம் எல்லையற்றது முடிவற்றது
அசையாமையில் அசைவு காட்டுவது ...

பாம்புப் பிடாரன் :

பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்
குழலிலே இசை பிறந்ததா தொளையிலே பிறந்ததா ?
பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா ?
அவன் உள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது ....

சிற்றெரும்பு :

சிற்றெறும்பைப் பார்
எத்தனை சிறியது !
அதற்குள் கை கால் வாய் வயிறு எல்லா அவையவங்களும்
கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர் ? மஹா சக்தி ...

எழுதியவர் : கவின் சாரலன் (12-Dec-15, 11:19 am)
பார்வை : 189

மேலே