மர்ம சப்தங்கள் 2

தம்பி நீங்களும் அந்த சப்தத்த கேட்டிங்களா என்றார் தோப்பின் காவல்காரர் அதிர்ச்சியோடு
ஆமா என்று மெதுவாக தலையை அசைத்தான் சதிஷ்
கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு சதிஷ் மீண்டும் காவல் காரரிடம் பேச்சை கொடுத்தான்
"அண்ணே அது என்ன சப்தம்....!" என்றான்
தம்பி அது.... அது.... வந்து கொஞ்ச நாளைக்கு முன்னாடி காட்டுக்கு வேலைக்கு வந்த பொம்பளைங்க இந்த ஆத்தங்கரைல குளிக்கும் போது காட்டாத்து வெள்ளம் திடிர்னு வந்திடுச்சு.
அப்போ அந்த பொம்பளைங்க அலறல் சத்தம் கேட்டு அங்க ஓடி போய் பார்த்தேன் ஆத்துல தண்ணி பயங்கரமா வந்திடுச்சு அவங்கள காப்பாத்த நான் முயற்சி பண்ணியும் அவங்கள காப்பாத்த முடியல அவங்க சாவுக்கு போராடினது அலறுனது இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு தம்பி என்றார் " காவல்காரர்.
"'அப்போ நான் கேட்ட அலறல் சப்தம் இறந்து போனவங்கோலடது அப்படின்னு சொல்றிங்களா" என்றான் கிண்டலாக சதிஷ்
"தம்பி சொன்னா நம்ப மாட்டிங்க நான் பலமுறை அந்த அலறல் சப்தத்த கேட்டிருக்கேன்" என்றார் காவல்காரர்
"அப்படி இல்லைங்ககண்ணா நான் கேட்ட சப்தம் நான் கைல வச்சிருக்குற மைக் மூலமா கேட்டேன் நீங்க நேரடியாவே கேட்டிருக்கிங்க அதான்..... "என்று இழுத்தான் சதிஷ்
"தம்பி நீங்க சொல்றது கிட்டத்தட்ட சரி தான் அவங்க இறந்த கொஞ்ச நாள் கழிச்சு ராத்திரி நேரத்துல காவலுக்கு நான் தோப்புல தூங்கிட்டிருந்தேன் அப்போ பொம்பளைங்க அழுகுர சத்தம் கேட்டுச்சு சத்தம் வந்த பக்கம் போய் பார்த்தேன் யாரையும் காணும்..... அப்பறம் மறுபடி என் இடத்துல வந்து படுத்துக்கிட்டேன்"
கொஞ்ச நேரம் கழிச்சு என் பெயர சொல்லி கூப்பிடுற மாதிரி சத்தம் கேட்டுச்சு கைல வச்சிருந்த டார்ச் லைட்ட சப்தம் வந்த பக்கம் அடிச்சு பார்த்தேன் அங்க ஒரு பொண்ணு அழுதுகிட்டே நின்னுச்சு அந்த பொண்ணு ஆத்து வெள்ளத்துல செத்துப்போன பொண்ணு அதுனால நான் இருந்த இடத்த விட்டு எங்கையும் போகல இங்கேயே நின்னுகிட்டேன்.
மறுநாள் காவலுக்கு என் மச்சான தொனைக்கு கூட்டி வந்து படுத்தேன் அன்னைக்கு ராத்திரியும் அதே சப்தம் கேட்டுச்சு என் மச்சான எழுப்பி கேட்டேன் அவனுக்கு எந்த சத்தமும் கேக்கலைன்னு சொன்னான்.
அதுகப்ரம் தினமும் நிறைய பொண்ணுங்க அலறும் சத்தம் கேட்கும் கொஞ்ச நாளுல எனக்கு பழகிடுச்சு
ஒருநாள் எங்க ஊரு கருப்பசாமி கோவில் பூசாரிய கூட்டி வந்து பூஜை நடத்துனேன் அப்பறமா அந்த சத்தம் தோப்புக்குள்ள கேக்குறது இல்ல என்றார் தோப்புகாவலர்
"அப்படினா அந்த சத்தம் அதுக்கு அப்றம் கேக்கலையா"என்றான் சதிஷ்
"தோப்புக்குள்ள கேக்கல...... அந்த மரத்துகிட்ட கேட்டுச்சு" என்று மரத்தை காட்டினார் தோப்பின் காவலர்
அந்த மரத்தை பார்த்ததும் சதிசுக்கு லேசாக வேர்க்க ஆரம்பித்தது
அந்த மரமா என மீண்டும் கேட்டான் சதீஷ்
ஆமா தம்பி அதான் என்றார் தோப்பின் காவலர்
சதிஷ் தனது ஆராய்ச்சியை அந்த மரத்துக்கு கீழே தான் செய்திருந்தான் அதனால் அவனுக்கு ஒரு வித பயம் தொற்றி கொண்டது .

தொடரும்....

எழுதியவர் : மொழியரசு (12-Dec-15, 12:36 pm)
சேர்த்தது : மொழியரசு
பார்வை : 501

மேலே