தந்தையின் தாலாட்டு

சின்னஞ்சிறு கண்மணியே...செல்ல முத்தம் தாராயோ..
உன்னைக் கட்டி அனைத்திடுவேன் கண்ணுறங்கு கண்மணியே..

வேறொருவர் கைப்படவே நான் விடவும் மாட்டேனே
உன்னருகில் நான் இருப்பேன் கண்ணுறங்கு கண்மணியே!

நீயுரங்கும் வேளையிலும் கண்விழித்துக் காப்பேனே
தந்தையுண்டு உன்னருகே அச்சம் இன்றி நீ உறங்கு!

நாளை ஒரு நாள் வருமே... நீ நாடாள கூடிடுமே..
எந்த தேசம் செண்டாலும்... என் குழந்தை நீ தானே!

நான் கண்மூடும் நாள் வரையில் உன்னுடனே சேர்ந்திருக்க
வரமொன்று தந்திடுவாய் என்னுயிரும் நீ தானே!

சின்னஞ்சிறு கண்மணியே... செல்ல முத்தம் தாராயோ
உன்னைக் கட்டி அனைத்திடுவேன்... கண்ணுறங்கு கண்மணியே..

உன்னை எந்தன் வயிற்றினிலே.. நான் சுமக்க வாய்க்கவில்லை
நெஞ்சத்திலே சுமந்திருப்பேன்.. நீ எனக்கு சுமையும் இல்லை!

நீ வந்து பிறந்ததுமே தந்தை என்று ஆனேனே...
நீ வளரக் காண்கையிலே என்கடமை உணர்ந்தேனே!

நாளை உந்தன் வாழ்வினிலே.. கஷ்டமுண்டு நஷ்டமுண்டு
அஞ்சிடாதே என் மகனே..தந்தை உந்தன் துணை இருப்பேன்!

வெற்றியில் நீ திளைத்தாலும், கஷ்டத்திலே துவண்டாலும்,
ஒருமனமாய் நான் இருந்து...நல்வழியில் உனைச்சேர்ப்பேன்!

சின்னஞ்சிறு கண்மணியே... செல்ல முத்தம் தாராயோ...
உன்னைக் கட்டி அனைத்திடுவேன்...கண்ணுறங்கு கண்மணியே!

தந்தை என்று அஞ்சிடாதே..நல்ல நண்பனாய் இருப்பேன்
நீ தவறேதும் செய்துவிட்டால்.. புத்தி சொல்லியேத் தடுப்பேன்!

பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம்
எனக்கென்று எதுவும் வேண்டாம்!

நல்ல மகன் நீ எனவே.. ஊர் உரைக்கக் கேட்க்க வேண்டும்!
உன்னைப் பெற்று வளத்ததர்க்கு.. அதை மட்டும் செய்திடுவாய்!!

செல்வம் ஒரு நாள் சென்று விடும்...
புகழும் கூடப் பொயித்துவிடும்..
நல்ல குணம் கொண்டிடுவாய்..
உலகத்தையே வென்றிடுவாய்!!!

சின்னஞ்சிறு கண்மணியே... செல்ல முத்தம் தாராயோ..
உன்னைக்கடி அனைதிருவேன்.. கண்ணுறங்கு கண்மணியே!!!!

எழுதியவர் : நேதாஜி (12-Dec-15, 2:36 pm)
பார்வை : 324

மேலே