நட்பு நமக்கு ஒரு துடுப்பு, நிலைக்கட்டும் அந்த நிஜத்துடிப்பு
தோழி...
பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
திருமணம் செய்துகொள்
குழந்தைகளைப் பெற்றெடு
நன்கு படிக்கவை
சொந்தக்காலில் நிற்கவை
அவர்களுக்கும் திருமணம் செய்துவை
பேரன்,பேத்தி பெற்றெடு.
பின்
எல்லாம் முடிந்த ஒரு தனிமையில்
என்னடா இது வாழ்க்கையென
எப்போதாவது தோன்றினால்
உடனேக் கிளம்பி வந்துவிடு.
நண்பன் நானிருக்கிறேன்...
_____________________________________
படைப்பு.: முகநூலில் கு.விநாயக மூர்த்தி