முதியோர் இல்லங்களை தேடி

கண்ணிலே கண்டவர் சொன்ன
அறிவுரையை ஏற்று அத்தனை கோயிலுக்கும்
சென்று மடிப்பிச்சை வாங்கி மண் சோறு
சாப்பிட்டு, பாதம் அதிர நடந்தால் கூட பயமா இருக்குமோ
என்றெண்ணிபார்த்து பார்த்து அடி வைத்து மூன்று வேளை
சோறையும் பத்திய சோறாய் உண்டேன்!

அம்மா என்று நீ சொன்ன ஓர் வார்த்தைக்கு
அகிலத்தையும் அழைத்து விழா எடுத்தேன்!

பார் போற்றும் அறினாய் வீரனாய் நீ வர இறுதி
துளி குருதியையும் பாலாய் மாற்ற துணிந்தேன்!

முப்படைகளும் கொண்ட ராஜாக்களும் தோற்றே போவார்கள்
உன் கம்பீரத்தில் என்றெண்ணி உவகை கொண்டேன்!

எல்லாம் கற்று மனிதத்தை சொல்லி தர மறந்தேன் போல

நான் நடந்ததை விட அதிக நடை நீ
நடக்கிறாய் முதியோர் இல்லங்களை தேடி!

இன்றும் நீ எனக்கு பத்திய சாப்பாட்டையே
உணவாக தருகிறாய்

இப்பவும் சொல்லி கொள்வேன்
என் பிள்ளை பழசை மறக்காது என்று!

எழுதியவர் : aysha (14-Dec-15, 4:54 pm)
பார்வை : 317

மேலே