உறங்காத இரவுகள்

உறங்காத இரவுகள்
உறங்கிக் கொண்டிருக்கின்றன
-கனவுகள்
(இது தோல்வியின் முடக்கம்)

உறங்காத இரவுகள்
விழித்துக் கொண்டிருக்கிறது
-மனது
(இது முயற்சியின் தொடக்கம்)

உறங்காத இரவுகள்
உழைத்துக் கொண்டிருக்கிறது
-கரங்கள்
(இது வெற்றியின் துவக்கம்)

$ மூர்த்தி .

எழுதியவர் : (15-Dec-15, 1:17 pm)
Tanglish : urangaadha iravugal
பார்வை : 48

மேலே