அம்மாவிடம்

அன்பை அம்மாவிடம் கற்று கொள்
அறிவை ஆசிரியரிடம் பெற்று கொள்
பண்பை அப்பாவில் படித்து கொள்
பாசத்தைப் பாட்டியிடம் பிடித்து கொள்
சுறுசுறுப்பை எறும்பிடம் கற்று கொள்
சுற்றத்தைக் காகத்திடம் கற்று கொள்
சேர்த்தலை தேனீயிடம் கற்று கொள்!
சேமிப்பை எறும்பிடமே கற்று கொள்

ஆராவாரம் கடலிடம் கற்று கொள்
அமைதியை அதனிடமே கற்று கொள்
வீரத்தை வேங்கையிடம் கற்று கொள்
வேகத்தை மானிடம் கற்று கொள்
ஓட்டத்தை குதிரையிடம் கற்று கொள்
ஆட்டத்தை மயிலிடம் கற்று கொள்
ஆட்சியை சிங்கத்திடம் கற்று கொள்
அணைப்பை பூனையிடம் கற்று கொள்
இனிமையைக் குயிலிடம் கற்று கொள்
இயற்கையிடம் எல்லாம் கற்று கொள்

---------- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (15-Dec-15, 2:16 pm)
Tanglish : ammavidam
பார்வை : 153

மேலே