உண் டியல் ஒன்றை வாங்கிடு

உண்டியல் ஒன்றை வாங்கிவிடு
உண்மைத் தோழன் ஆகிவிடு
ஆபத்து நேரத்தில் உதவிடுமே
அதுவே நமக்கு துணையாமே!
அம்மா தருவாள் ஒரு- காசு
அதனை உண்டியலில் போட்டு விடு
அப்பா அளிக்கும் காசையும்
அழகாய் அதனில் சேர்த்து விடு
மாமா தருவார் ரூபாயை
மடித்து போடு மறவாமல்
ஆமாம் அதுவே சேமிப்பாம்
அதனை நாளும் செய்வோமே!


---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (15-Dec-15, 2:19 pm)
பார்வை : 54

மேலே