மர்ம சப்தங்கள் 3

சதிஷ் தனது காரில் வேகமாக அவனது வீட்டை நோக்கி சென்றான். அப்பொழுது அப்பொழுது சதிஷின் செல்போன் ஒலித்தது. செல்போனை காரின் ஸ்பீக்கரில் ஆன் செய்தான்.
"ஹலோ சதீஷ் எங்கடா போன கொரங்கு உனக்கு போன் பண்ணினா தொடர்பு எல்லைக்கு வெளியே இருகுரார்னு வருது" என சத்தம் போட்டால் ஜெனிபர்.
"ஜெனிபர் சாரி நான் ஒரு ஆராய்சிக்காக செண்பகதோப்பு போயிருந்தேன் அங்க உள்ள சிக்னல் கிடைக்கல" என்றான் சதிஷ்.
"டே லூசு இப்படியே காடு மரம் செடி கொடின்னு அலைஞ்சுக்கிட்டு இருகிறத இன்னும் நீ விடலையா நீ எப்போ திருந்த போற" என கிண்டலாக கேட்டல் ஜென்பர்
"ஜெனிபர் இன்னைக்கு ஒரு சம்பவம் நடந்தது.... நீ ஒரு சைகாலகிஸ்ட் தானே..... எனக்கு ஒரு டவுட் ....
கொஞ்சம் சொல்றியா..." என்று நிறுத்தி நிறுத்தி பேசினான் சதீஷ்
"சதீஷ் இப்போ எதுக்கு மணிரத்னம் படம் மாதிரி பேசுற எதையாது பார்த்து பயந்துட்டியா" என்றாள் கிண்டலாக ஜெனிபர்.
சதிஷ் நடந்தவற்றை எல்லாம் ஜெனிப்பரிடம் கூறினான் " எனக்கு மைக்ல கேட்ட அலறல் சத்தம் தோப்பு காரருக்கு நேரடியாவே எப்படி கேட்டதுன்னு மட்டும் என்னக்கு புரியல" என்றான் சதீஷ்
"நீ என்ன ஏதும் பேய் நாவல் எழுத போறியா இப்படி கதை சொல்ற" என்றாள் ஜெனிபர்
"ஹேய் அயம் சீரியஸ் நீ ஒரு டாக்டர்ன்னு மதிச்சு கேட்ட காமெடி பண்றியா என்றான் சதீஷ்
"ஓகே ஓகே ஐ வில் டெல் யூ, அந்த தோப்பு காரருக்கு இறந்தவன்களோட சப்தம் கேட்டதுக்கு காரணம் என்னன்னா அந்த சம்பவம் அவர் மனச ரொம்ப பாதிச்சிருக்கு அதுனால தான் அவருக்கு அந்த சப்தம் கேட்டிருக்கு வெள்ளம் வந்து செத்துப்போன சம்பவத்த கேள்வி மட்டும் பட்டதால்தான் தோப்பு காரரோட
மச்சானுக்கு அந்த சப்தம் கேட்கல என்று ஜென்பர் சொல்லி கொண்டிருக்கும் போதே செல்போன் இணைப்பு துண்டிப்பனது.
"ஹலோ ஹலோ" என்று சதிஷ் அழைத்தான் எந்த பதிலும் இல்லாததால் தனது செல்போனை கையில் எடுத்து பார்த்தான்
"சே போன் கட் ஆகிடுச்சு" என்று எரிச்சலோடு தனக்குள் சொல்லிக்கொண்டான்.
அப்பொழுது திடிரென அவன் காரை நோக்கி ஒரு எருமை மாடு ஆக்ரோசமாக ஓடி வந்தது.இதனை சற்றும் எதிர் பார்க்காத சதீஷ் சடன் பிரேக்கை போட்டு காரை வலதுபுறமாய் திருப்பினான்.கார் வலதுபுறத்தில் இருந்த புதருக்குள் சென்றது.
நிலை குலைந்த சதீஷ் தன்னை ஆசுவாச படுத்தி கொண்டான் பின்பு தனது காரை மெதுவாக ரிவேர்ஸ் எடுத்து ரோட்டில் நிறுத்தினான்.பின்பு காரை விட்டு இறங்கிய சதீஷ் சுற்றும் முற்றும் பார்த்தான் கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு எருமை மாட்டை காணவில்லை.
-தொடரும்

எழுதியவர் : மொழியரசு (16-Dec-15, 2:08 pm)
சேர்த்தது : மொழியரசு
Tanglish : marma Sapthankal
பார்வை : 491

மேலே