மங்குனி

தினேஷ் ரொம்ப டென்ஷனா இருந்தான்...

" வெங்கி... மத்தியானத்துல இருந்து
எங்க பக்கத்துவீட்டு பொண்ணை காணோம்டா..! "

" என்ன படிக்குது..? "

" காலேஜ் செகண்ட் இயர்..! "

" ஓரு நிமிஷம் வெயிட் பண்ணு "-னு
சொல்லிட்டு போனை போட்டேன்...

" எங்கடா இருக்கே..?!! "

" _____________ "

" ஓ.. அப்படியா... ஒரு சின்ன மேட்டரு...
சரி நான் அப்புறமா பேசறேன்...!! "

போனை கட் பண்ணிட்டு...

" தினேஷு.. இந்நேரம் அந்த பொண்ணு வந்திருக்கும்..
நீ வேணா போன் பண்ணி கேட்டுப்பாரு..!! "

அவனும் போனை பண்ணினான்.. பொண்ணும்
வந்துடுச்சினு சொன்னாங்க..

தினேஷ்க்கு ஆச்சரியம் தாங்கல...

" எப்படிடா கரெட்டா சொன்னே..? யாருக்குடா
போனை போட்டே..?! "

" எல்லாம் நம்ம மங்குனிக்கு தான்...!! "

" மங்குனிக்கா..? அவனுக்கு எதுக்குடா..?! "

" ஊருக்குள்ள பொண்ணு காணோம்னா.. இவன்
எதாவது இழுத்துட்டு ஓடியிருந்தாதான் உண்டு..
இந்த பன்னாடையே வீட்லதான் இருக்கேனு சொல்லிச்சு..
அத வெச்சி தான் அந்த பொண்ணு ஓடியிருக்க
சான்ஸ் இல்ல... வந்துடும்னு சொன்னேன்..!! "

" அடப்பாவிகளா..!! "

எழுதியவர் : செல்வமணி (17-Dec-15, 11:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 75

மேலே