அந்நியமான நியாயமான ஆசைகள்

அந்நியமான நியாயமான ஆசைகள்!!
*******************************************
மனிதம் பேசும் மனிதம் கண்டால்
கை கொடுத்திட ஆசை
வாழ்வில் விழுந்தோர் தமை
உயர்ந்திட முயன்றார்
கட்டியணைக்க ஆசை!!

போலிக் காட்சி யேற்று
கண்ணீர் விடுதல் தவிர்த்து
நிஜ வாழ்வு தன்னில்
உழல்வார் கண்டு கசிந்து
வருந்துமவர்க்கு முத்தமிட ஆசை!!

மன சாட்சி கொன்று சுயநலம் கொண்டு
வாழ்வார் தவிர்ந்திட ஆசை
இறைக்கு அஞ்சி
ஒவ்வா இரை மறுப்பார்
கனிவாம் இன் சொல் பகிர்ந்திட ஆசை!!

பெருமை பேசி செறுக்காய் நடப்பார்
சினேகம் வெறுத்திட ஆசை
நியாயம் பேசி
அநியாயம் செய்வார்
அந்நியமாக ஆசை!!

எழுதியவர் : ஜவ்ஹர் (19-Dec-15, 8:05 am)
பார்வை : 281

மேலே