என்னை மன்னித்துவிடு

தேடல் நிறைய வெளியூர்
போனேன் மன்னித்துவிடு
என் ஊரே!

என்னை மன்னித்துவிடு!


சுத்த காற்றை இழந்து நான்
சொத்த காற்றை சுவாசித்தேன்
மன்னித்துவிடு என் காற்றே!

என்னை மன்னித்துவிடு!


உங்கள் இசையை தவித்து
செயற்கை இரைச்சலை கேட்டேன்
மன்னித்துவிடு என்
சிட்டுக்(செல்ல)குருவிகளே!

என்னை மன்னித்துவிடு!


உங்கள் நிழலிடம் விலகி
வெறும் கட்டிடத்துக்குள்ளே வாழ்ந்தேன் மன்னித்துவிடு
என் பிரிய தென்னங்களே!

என்னை மன்னித்துவிடு!


சலசல பாடல் விட்டு வெகுதூரம்
சத்த சத்த வண்டிகள் கேட்டேன்
மன்னித்துவிடு என் குளிந்த நதியே!

என்னை மன்னித்துவிடு!


வழிபோக்கனுக்கு இடம் கொடுக்கும்
நான் அங்கோ இடமில்லாமல் வழிபோக்கனானேன்
மன்னித்துவிடு என் பொது வாசலே!

என்னை மன்னித்துவிடு!


மங்கையர் கொலுசின் சங்கீதம்
விட்டு பெண்கள் செருப்பின்
சத்தம் கேட்டேன் மன்னித்துவிடு
என் மங்கைமார்களே!

என்னை மன்னித்துவிடு!!


தாய்சோறு இழந்து வெறும் நா
இறக்கும் கடைசோறு திண்றேன்
மன்னித்து விடு என் தாயே!!

என்னை மன்னித்துவிடு!


சுற்றும் நேரம் மறந்து அங்கே
ஒரு தனி அறைக்குள் புகுந்தேன்
மன்னித்துவிடு என் நண்பர்களே!

என்னை மன்னித்துவிடு!


இன்றோ,நம் ஊர் பெயர்
சொல்லும் அளவிற்க்கு
நான் ஒரு கவிஞனானேன்!

சேர்த்து விடு என்னை உங்களிடம்
சேர்த்துவிடு!!

எழுதியவர் : (19-Dec-15, 11:40 am)
Tanglish : ennai mannithuvidu
பார்வை : 305

மேலே