இதுதான் நான் கேட்பது

பருவங்கள் மாறும்போது
நானும் எனது ஆடைகளை
உடலோடு நெய்து கொள்கிறேன்...
நான்
இப்பொழுதுதான்
துளிர்விடுகிறேன்
அந்தத் தளிரை நறுக்கினால்
எனக்கு வலிக்கும்
அல்லவா ?
ஆனாலும்,
கவிதைத் திருடா
எனது நெருக்கமான நண்பா..!
இதயத் திருடா..!
மீண்டும் மீண்டும்
இந்தத் தளிர்
முட்டி முளைக்குமென
அறியாத அப்பாவியாகிவிட்டாயே ..?
எனக்குக் கோபம்தான்
என்மனதை இடித்துக்கொண்டு
வெளிப்பட்டது...
எனக்குள்ளே இருக்கும்
எழுத்தும் அதைப்போல
வருவது முறையல்ல..!
சரிதான்..!
தோழர்களே ..!
நீங்கள் சொல்வது சரிதான் !
எனக்குப் பொறுமைப்புஷ்பம்
அவசியம் தேவை ..
எழுத வேண்டாமென்றுதான்
எத்தனித்தேன்.
ஆனால் ,
என் எழுத்தோ
எழுது என்று
என் கோபத்தை
தணிக்கிறது ...!
என்னசெய்வது
நான் சாதாரணமா(ண)னவன்.
என்னை நெறிப்படுத்துங்கள்!
என்னைச் சீராக்குங்கள் !
நான் நடக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன் !
எனக்குக் கரங்கள்
தரவேண்டாம் ..!
கீழேவிழும் என்னைத்தூக்கி
விடவேண்டாம் ..!
சைகை செய்ய்ங்கள்...
அதுபோதும் ...
இதுதான் ..!இதுதான் ..!
இதுதான் நான் கேட்பது ...!
நன்றி
ப(து)ணிவுடன்,
திருமூர்த்தி