நண்பனே என் நண்பனே
நண்பா
எத்தனை ஆண்டாக ...
உன்னை பார்த்து ....
வாழ்க்கையின் வட்டம்
உன்னையும் என்னையும் ...
இருமுனையில் வாழவைத்து ...
விட்டது -நான் உள்ளுரில் ...
நீ வெளியூரில் .....!!!
நீ
நான் சிறுவயதில்
துன்ப பட்டபோது வாங்கி
தந்த காற்சட்டை சேட்...
இன்னும் வைத்திருக்கிறேன் ..
என் உடுப்புபெட்டிக்குள் ....!!!
காலங்கள் மாறி
காலன் என்னை அழைக்கும்
வரை மனதில் அழியாத ஒரே
விடயம் பள்ளி நட்பு ....!!!