ஓஅன்பே

தரை வந்த மேகமே - உன்னை
தொட வந்தேன் நானே!
மழை ஆகி பொழிகிறாய் - உன்னை
தொட்ட பின் ஏனோ!

சுட்டி வைரமே என்னை
அடக்கி வைக்கிறாய் உன் கண்ணில்!
கட்டி அணைக்கவா உன்னை
நெஞ்சோடு தான் என்னில்!

ஓ!!! பனிதங்கும் பூவே,
ஓ!!!பறந்தாடும் கிளியே,
உன் பால் தோல் மீது
பாலாடை நான்!

வெகுதூரம் நீயும் நானும்
மெதுமெதுவாய் நடந்து
கண்டங்கள் தாண்டலாம்!

அண்டார்டிக்கா மையத்தில்
நீயும் நானும் பனிகுளிரில்
ஊடல் தான் செய்யலாம்!

மைனஸ் டிகிரியில்
இரத்தம் உறையுமே
பெண்ணே,முத்தங்கள் இடு!

மையப்பகுதியில் என்
தேகம் புதையுமே
அய்யோ,என்னை போர்த்திடு!

நுரையிரல் சுருங்கி
வெளிவிடும் காற்றில்
தும்மல் பிறக்கிறதோ!

இது உண்மையா???

நொடிபொழுது அவள்
என்னை நினைத்தால்
எனக்கு தும்மல் பிறக்கிறதே!!

இது தான் உண்மையோ!!

குட்டிக்காடே உன்னில்
தொலைய வேண்டும்!
உன் கூந்தல் மரத்தில்
பூவாய் மாற வேண்டும்!

நமக்குள் ஒரு நாள்
உலகப்போர் நடக்கனும்!
அது நீயும்,நானும்
விட்டுக்கொடுத்தே நீளனும்!
இறுதி தீர்ப்பாய் நாம்
இருவருமே ஜெயிக்கனும்!

நாம் இரவில் உறங்கி
பகலில் விழிப்போம்
உதடுகள் இணைந்தே
இருக்கட்டும்!
கவனம்,
உடலல்ல!!!!

எழுதியவர் : (22-Dec-15, 10:06 pm)
பார்வை : 91

மேலே