ஒவ்வொரு நொடியும்

உன்னை கானும் வரை நீ யார் என்று எனக்கு தெரியவில்லை.
உன்னை கண்ட பிறகு நான் யார் என்று எனக்கு புரியவில்லை..
அழகான தேவதையாய் என் வாழ்வில் வந்தாய்..
என்னை நானே மறக்கும்படி என்ன மாயம் செய்தாய்..
உன்னை கண்டு நான் மயங்கினேன்
மயங்கிய இதயத்தை கண்டு நான் வருந்தினேன்
மயங்க வைத்தது உன் தவறில்லை
பெண்ணே நீ இவ்வளவு அழகா என்று வியக்க வைத்தாய்
உன் காதல் வலையில் என்னை விழ செய்தாய்
வலையில் விழுந்ததும் துடிக்கும் மீன்போல்
என் இதயம் உன்னை நினைத்து படபடவென துடித்தது
என் இதயம் துடிக்கும் ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகள்
அதற்கு உயிர் கொடுத்து உருவமாக்கும் என் கனவுகள்
தவியாய் தவித்தேன் உன்னை மணந்து கொள்ள
என் ஆசை கனவுளை உன்னிடம் பகிர்ந்து கொள்ள
எப்பொழுது நீ வருவாய்?
என்னை மணந்து கொள்வாய்?

எழுதியவர் : Anusuya Sekar (23-Dec-15, 12:31 pm)
Tanglish : ovvoru nodiyum
பார்வை : 173

மேலே