இந்த பௌர்ணமி

இன்று பௌர்ணமி .......

நினைவிருக்கா....?
சென்ற பௌர்ணமிகளில்
சேர்ந்து போனோம்
இருவருமாய்.....
உறவுகளோடு உள்ளாசமாய்....
உறங்கிக் கிடந்த கடற்கரைக்கு...
உன்னத நட்போடு.......,

இந்த பௌர்ணமிக்கும்
இருந்த எல்லோரும்
போய் விட்டார்கள்......
நானோ தனிமையில்
திண்ணை படியினில்...
அந்த முழு நிலவை பார்த்துக் கொண்டு...
பெருமூச்சிட்டு......
நீயும் அந்நிலவையே பார்த்துக் கொண்டு...
நம் நினைவுகளை
மீட்டிக் கொள்வாயென...
நினைத்துக் கொண்டிருக்கிறேன்...
பாவம்.. என் புத்திக்கு தெரியவில்லை....
நீ இந்த பௌர்ணமிக்கு
உன் கணவனோடு
கடற்கரையில் கடலை போட்டுக்
கொண்டிருப்பாயென....
நீ தான் நம் நட்பை
தூக்கி எறிந்து பல மாதமாயிற்றே..
பின் எப்படி இந்த பௌர்ணமி
என்னை உனக்கு நினைவு படுத்த
போகிறது......?


(என் நட்பையும் அன்பையும்
அரை நொடியில் அத்து விட்டு போனால் அவள்)

எழுதியவர் : M.F.Askiya (24-Dec-15, 5:05 am)
Tanglish : intha pournami
பார்வை : 361

சிறந்த கவிதைகள்

மேலே