நாம் படிப்போம்

சங்க இலக்கியம் எண்ண முடியா
தொலைந்து போனது தொன் காலம்!
எச்சம் கொண்ட இலக்கிய மோ
எடுத்து இயம்பும் இலக்க ணத்தை!
திருக்குறள் நித்தம் நாம் படித்து
வள்ளுவ னோடு போர் இடுவோம்!
ஐம்பெரும் காப்பியம் அகம் அமிழ்ந்தால்
அகிலமும் நமக்கு அடிமை யடா!
சங்க இலக்கியம் நாம் அறிந்தால்
அம்மக்கள் வாழ்வு அகம் ஒளிரும்!
பக்தி இலக்கியம் பல கண்டால்
பக்குவம் மனது கொள்ளு மடா!
நீதி இலக்கியம் நாம் படித்தால்
நிச்சயம் நாமும் ஞானி யடா!
காப்பிய இலக்கியம் கண் படித்தால்
கவிஞன் வருவான் உன் னுள்ளே!

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (24-Dec-15, 7:48 am)
பார்வை : 132

மேலே