கடன்கள்

நகங்கள் கடித்தபடி
நிற்கும் அந்த
சிறுவனின் வாடிய
முகத்தில்..
திடீரென ஒரு
பிரகாசம்..

போன மாதம் கேட்ட
புது மூன்று சக்கர
சைக்கிளை அப்பா
கையில் தூக்கி
வந்து கொண்டிருக்கிறார்..
கிடைத்தது கடன் !
..
..
காரணத்தோடுதான்
அவர்கள் வீட்டு
நாய்க்குட்டியும்
வாலை மட்டுமின்றி
உடம்பையும் சேர்த்து
ஆட்டியபடி..
வரவேற்கிறது எஜமானரை..

கையில் அவர்
வாங்கி கொண்டு வரும்
ரஸ்க்கு ..
ரொட்டித் துண்டு
வாசம் அப்படி..
நன்றிக் கடன் !

..
..
அங்கு எல்லோருமே
எல்லாம் மறந்து
வரவேற்கிறார்கள் ..
அந்தப் பிரமுகரை
அவரது கைகளைப்
பார்த்தபடியே..

அவர்கள்
சுபாவம் அப்படி..
எதையும் மறுப்பவர்கள்
அல்ல அவர்கள்..
எளிதில் மறப்பவர்கள்..
எதையுமே!..
முன் ஜென்மக் கடன் !

****

எழுதியவர் : கருணா (24-Dec-15, 3:20 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 957

மேலே