கத்அ

கத்அ- என்பது கஜல் மற்றும் ருபாயீ போன்று ஒரு ஃபார்சீ கவிதை வடிவம்.
கத்அ- அடியீற்று ஒலி இயைபு கொண்ட 4 வரி கவிதை வடிவம்.. ருபாயீ பஹர்கள் (சந்தங்கள்) களூக்கு வெளியே எழுதப்படுபவை கத்அ என்று அழைக்கப்படிகின்றன.
தமிழில் ருபாயீ களும், கத்அ களும் எனக்கு முன்பு யாராவது எழிதி இருக்கிறார்களா என்பது பற்றி எனக்கு தெரியவரவில்லை…
எனது முயற்ச்சி களுக்கு உங்களது ஆசிகளை வேண்டுகிறேன்..
ரோச்சிஷ்மான்

கத்அ

1
ஆசைகள் செய்தன மாயம்
வாழ்வதினால் ஆனது காயம்
வேண்டியது விளைய வில்லை
வெளுக்குது, வெளுக்குது சாயம்

2
சாதல் வரும் வரை மொதல் நிக்காதோ?
மனங்களிலே உள்ள பாரம் முற்றாதோ?
நம் வாழ்க்கை ஏன் இப்படி வீணாய் போனது?
மனிதனிடம் அமைதி என்பது வாராதோ?

3
நாளும் நிக்காமல் நான் நாடுகிறேன்
ஓர் எல்லையைத் தாண்டி விரும்புகிறேன்
மனிதன் நான் நிம்மதியை விட்டு விட்டு
மென் மேலும் ஓயாமல் ஓடுகிறேன்

4
காயம் ஆகாத உடலே கிடையாது
கவலை இல்லாத இதயம் இருக்காது
பூத்த மலர்கள் தவறாது வாடாதோ?
குறைகள் இல்லாத வாழ்க்கை அமையாது

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (24-Dec-15, 3:34 pm)
பார்வை : 62

மேலே