விசய் விசய் டேய் விசய் கண்ணு

விசய், டேய் விசய் கண்ணு. எங்கடா போயிட்டே.

அய்யா ‘விசய், விசய்’ன்னு யாரையோ அந்தப் பாட்டி யாரையே கூப்பிடறாங்களே, அது யாருங்க அய்யா?

அவுங்க என்னோட அம்மா.கிராமத்திலெ இருந்து எங்களப் பாக்க வந்திருக்காங்க.

விசய் -ன்னு கூப்பிட்டாங்களே அது யாருங்க அய்யா.


எம் பையன் விஜய் -யைத் தான் கூப்பிட்டாட்ங்க.


அய்யா நாஞ் சொல்லறேன்னு தப்பா நெனைக்காதீங்க. நீங்க தேசிய அளவில் நல்லாசிரியர் பெற்ற மிகச் சிறப்பான தமிழாசிரியர்.நீங்களே உங்க பையனுக்கு நல்ல தமிழ்ப் பேரா வைக்காம எதுக்கய்யா அவனுக்கு விஜய்-ங்கற இந்திப் பேர வச்சீங்க? விஜய் -ன்னா என்னங்கய்யா அர்த்தம்.

விஜய் -ன்னா வெற்றி,வெற்றிகரமான -ன்னு அர்த்தம்.

ஏனுங்கய்யா ’வெற்றி’-ங்கறது ரொம்ப அருமையான பேரு தானே. அந்தப் பேரையே உங்க பையனுக்கு வச்சிருக்கலாமே

தம்பி நா பள்ளியிறுதித் தேர்விலெ எடுத்த குறைவான மார்க்குக்கு எந்தக் கல்லூரியிலும் எனக்குத் தமிழத் தவிர வேற எந்தப் படிப்பிலெயும் எடம் கெடைக்கல. நானும் தமிழ் இலக்கியத்திலெ விருப்பம் இல்லாமலெ எப்படியாவது வேலைக்குப் போயாகணுமேன்னு கஷடப்பட்டுப் படிச்சு நல்ல மார்க்கு வாங்கினேன். பி.எட். முடிச்சேன். எனக்குத் தமிழ் ஆசிரியர் வேலை கெடச்சுது. நான் கடமை தவறாம என் வேலையை பாத்ததாலே எனக்கு நல்லாசிரியர் விருது கொடுத்திருக்காங்க. பிள்ளைங்களுக்கு மொழிப் பற்றை வளக்கறது என்னோட வேலை இல்லை. ஏறக்குறைய எல்லாத் தமிழாசிரியர்களும் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கறபோது நா மட்டும் எதுக்குத் தம்பி எம் பையனுக்குத் தமிழ்ப் பேர வைக்கணும்.

அய்யா உங்களப் போன்ற தமிழாசிரியர்களே தமிழ்ப் பற்றை வளர்த்து நமது செம்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபடாம போனா வேறு யாரய்யா அந்தப் பணியைச் செய்வாங்க?

தம்பி நா வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேல பாத்து எங்கிட்டப் படிக்கற பசங்க எல்லாத்தையும் தேர்ச்சி பெறவைக்கிறேன். தமிழ்ல நெறையப் பேர நூத்துக்கு நூறு மார்க்கு வாங்க வைக்கிறேன். எனக்கு அது போதும் தம்பி.

சரிங்க சார். என்ன மன்னிச்சுங்க. உங்களுக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கொடுத்தாங்களே அவுங்க தான் சரியா ஆராயாம உங்களுக்கு அந்த விருதத் தப்பாக் குடுத்திருக்காங்க. வர்றங்கய்யா. வாழ்க உங்க தமிழாசிரியர் பணி
=================
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழ்ப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
===============
विजय (Hindi) Victory; Strong and victorious

எழுதியவர் : மலர் (24-Dec-15, 9:16 pm)
பார்வை : 138

மேலே