சோகம்

காலில் முள் குத்தினாற் போல வலி

என் நெஞ்சினிலே

கண்ணீர் விட்டு அழ வெட்கம் கொள்கிறேன்

அச்சம் கொள்கிறேன்

உயிராடு வாழ்ந்திட வெறுக்குது மனம்

தீ பிடித்து எரியுது உயிர்

கூடல் அற்ற் ஊடலாகத் தான் நான் வாழ்கிறேன்

தனிமையிலே

நான் படைத்த கதைகளில் வேதனைகள் ஆயிரம் என்பதால்

என்னை படைத்தவனும் சோகங்கள் மட்டுமே பல தந்திட்டானோ

சாகத் துணிவில்லை

வாழ முடியவில்லை

அய்யோ வாழப் பறிதவிக்கிறேன் ஆண்டவனே

எழுதியவர் : விக்னேஷ் (25-Dec-15, 6:08 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : sogam
பார்வை : 1161

மேலே