சுமை

பள்ளிக்கு செல்லும் பாலகனே !
பச்சிளம் முகம் மாறா பாலகனே !
புத்தகம் சுமக்கும் வயதில்
ஏனடா கண்ணே! விறகினை
சுமக்கிறாய் ? படிக்கும் பாடம்
சுமையல்ல.... நீ சுமக்கும்
விறகே சுமையாகும் .
விதியை வெல்லலாம்
வா... வா .. வெளியே ....!
பாடசாலைகள் உன்னைக்
கை நீட்டி அழைக்கின்றது .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Dec-15, 8:20 pm)
Tanglish : sumai
பார்வை : 197

மேலே