போதும்

உனெக்கென வாழ்வாய் மனிதா..
என்றும்..
உழைத்திட மறவாய் மனிதா!

வாழ்வில்...
ஒவ்வொன்றும் ஒப்பீடு செய்தால்..
ஒருநாளும் ஓய்வில்லை உனக்கு!

சிறு பொழுது பேராசைக்கொண்டால்..
பல இரவு கண்ணுறக்கம் கொல்வாய்!

உன் வாழ்வே உனதென்பது மறந்து!
பிறர் வாழ்வை நீ வாழ விழைகிறாய்!

ஆழம் அறியா அலைச்சருக்குப் போன்றது
உன் ஆடம்பர வாழ்வின் ஆபத்து!

தேவைக்கே பொருள் சேர்ப்பாய்!
அளவுடனே ஆசை வைப்பாய்!

ஆசைக்கு எந்நாளும் அளவில்லை!
பேராசைக்கு ஒருபோதும் மருந்தில்லை!

காட்சிகள் தூண்டிய ஆசையின் விளைவுகள்..
உள்ளம் வலிக்கின்ற வேளையில் உணர்வாய்!

உன் கள்ளமில்லா பிள்ளைச் சிரிப்பு..
ஆசைகள் வளர அறவே அற்று போனது!

இன்பம் தருவது பணமானால்..
ஏழையின் முகத்தில் சிரிப்பேது?

மனதில் உள்ளது மகிழ்ச்சி!
மனிதா..
உன் மனதில் உள்ளது மகிழ்ச்சி!

வேண்டும் என்ற வேட்க்கை வேண்டாம்!
அமைதி இழந்து அலைய வேண்டாம்!!
போதும் என்ற எண்ணம் போதும்!!
இனிதே மனதில் இன்பம் தோன்றும்!

எழுதியவர் : நேதாஜி (26-Dec-15, 11:13 am)
Tanglish : pothum
பார்வை : 128

மேலே