என் இனியவளே -கார்த்திகா

இளம் மஞ்சளில்
சிறிது கருப்பும்
ஆரஞ்சும் அதிகமாகக் கலந்து
விரல் தீண்டுகிறாய் நீ

உன்னிடத்தில் பெறுவதற்கு
நான் என்ன விலை தந்தால்
தகுமோ

காலத்தின் நீட்சியில்
நிறம் மாறாத
வானின் நீலத்தை
எடுத்துக் கொண்டு செல்

செம்பூக்களின் இதழ்
சிவப்பில் நீ
களவு போனாயோ

பச்சை இலைகள்
பாகாய் இனிக்க
மலர் கொய்கிறாய் நீ

சில வானவிட்களை
பயிரிட வேண்டும்
கன்னக் குழியில்
முத்தம் ஈந்து செல்
என் செல்ல பட்டாம்பூச்சியே!

எழுதியவர் : கார்த்திகா AK (27-Dec-15, 8:25 am)
பார்வை : 276

மேலே