சப்தங்கள் உடைந்தால் -கார்த்திகா

இருள் தின்னும்
மாலை மௌனித்ததொரு
கணப் பொழுதில்

பச்சைக் காய்கறிகளும்
நிறம் மாறாப் பூக்களும்
விலைபேசி விற்றுத்
தீர்ந்து கொண்டிருக்க

தெருவில் நாறும் வேசியவன்
தனங்களின் இடைவெளியை
உற்று நோக்கிய
அருவருப்பில்

உருண்ட
சதைக் கோளங்களைப்
பிய்த்தெடுத்து ரத்தம்
சொட்டச் சொட்ட
வழித்து அவன் முகத்தில்
விட்டெறிந்த போது

பிண வாடையை
முகர்ந்து மூச்சிலேற்றி
வெறி தீர்த்து
செத்துக் கொண்டிருந்தது
வன்புணர் மிருகம்!

அப்போதும்,
அதே மாலை
கவ்விய இருட்டோடு
சப்தம் தொலைத்து
மறைந்து கொண்டிருந்தது....

சதை பிறழ்ந்த
வெற்றுத் தனங்களை
உற்று நோக்குகின்றன
மீண்டும் அதே
வெறிப் பார்வைகள்..

எழுதியவர் : கார்த்திகா AK (27-Dec-15, 9:23 am)
பார்வை : 288

மேலே